'தாய் தந்தையரின்
அழகான அரவணைப்பு
பதக்கங்களினால் நனையும்
பாராட்டு மழை(லை)
செவியில் அமுதாகும்
அன்புக்காதலியின் பேச்சு
தோல்வியில் தூங்கும் போது
தட்டி எழுப்பும்
வீர நண்பர்கள்
சக பயணிகளுடன்
கேளிக்கை, கொண்டாட்டங்கள்
உரையாடலில் நிகழும்
அறிவு விரிசல் '
இவர்/இவைகளுடன்
நான் வாழ்கிறேன்
எங்கோ
என்னைப் பார்த்து
ஏங்கும் சமூக ஊமை
ஊமையாகிக்கொண்டிருக்கின்றான்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nee
Post a Comment