வானம் தன்னையே திரைச்சீலையாக்கி நிமிடத்திற்கு நிமிடம் அற்புதமான ஒவியங்களை தரும் ஓவியன்..மணி2.00 ....தினத்தந்தி அலுவலகத்தின் முன் வாசலில் நேற்றைய மாலை மலரும் இன்று காலை வெளியாகவுள்ள தினத்தந்தி யின் முக்கிய நிகழ்வுகள் கொண்ட செய்தி தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன..இரவுக் காட்சி பார்த்து விட்டு வானத்தை நோக்கியபடி அலுவலகத்தை கடந்தபொழுது நினைவுகள் என் மூளையில் மலர்ந்தன.
"டேய் சக்தி படம் சூர கடி டா.நூறுபா தண்டம்...இதுக்கு நாம ரூம்ல வெட்டி நியாயமாது போட்டிருக்கலாம்"
"ஆமாம் டா..டேய் அடுத்த வருஷம் நாம இப்படி இருப்போமா!!!!..நம்முடைய டைம் டேபில நம்ம பிஎல் நம்ம வொர்க் தீர்மானிக்கும்..இப்படி ஜாலியா திரியமுடியாதுடா"
ஹோப்ஸை வந்தடைந்த பொழுது மணி 3.30..எல்லா கடைகளும் திறக்க இன்னும் அரை மணி நேரமாகும்ஹோப்ஸை வந்தடைந்த பொழுது மணி 3.30..எல்லா கடைகளும் திறக்க இன்னும் அரை மணி நேரமாகும்.நாலு ஆட்டோ அதில் எப்.எம் போட்டு முழித்திருக்கும் மனிதர்கள்,நான்,சைக்கிளில் டீ விற்கும் சிறுவன் தவிர எல்லா உயர்திணை அஃறிணைகளும் சலனமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தன
டேய் சூக்கு இந்த டீ போதும் டா மணி 2.30 காலைல கடைசி லேப் எக்ஸாம் இருக்கு..இன்னும் ஆரம்பிக்கவே இல்லை டா"
ப்பிரி விடு,3.30 வரோம் 7.30 மணிக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுடலாம்"
ஆனால் நாங்க இரண்டு பேரும் 3.30 மணிக்கு தூங்கி 4 மணிக்கு எழுந்து விடலாம் என்று எண்ணி 10 மணிக்கு எழுந்து பல் துலக்காமல்,குளிக்காமல்,பௌடிக்காமல் அவன் பிட் அடித்து,நான் என் ரெக்கார்ட் பார்த்து எழுதி செய்யாமலேயே 80 மார்க் வாங்கியது சுவையான நினைவுகள.எங்கள் வகுப்பில் எல்லோரும் பிட் அடிப்பார்கள்.பாவாடை,பொட்டி,நபி,அய்யா,குஞ் 5 செமஸ்டர்கள் 8 பாயிண்ட் எடுத்தனர்.அவர்களிடம் சிஷ்யனாக சேர்ந்து பாஸ் பண்ணியவர்கள் ஏராளம்.கேபி (கிருஷ்னா பேக்கரி) இன்னும் திறக்க வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
lol..good one there...rare to see tamil blogs...nice...
Post a Comment