Saturday, January 23, 2010

'இறைவன்
ஒவ்வொரு பொருளையும் விதிக்கிறான்
நான் செய்கிறேன்'
பிரம்மா ஒரு ஞானியிடம்
சொன்னாரம்
சித்தன் சொல்லிகொண்டிருந்தார்

'ஏழைகளையும் உங்கள்
இறைவன்தான் விதிட்டாரா!!! '
வெகுண்டான் மனிதன்
பணக்காரர்கள் சிரித்தனர்

அன்று மாலையே
'அறிவியலும் ஆன்மிகமும்
ஏழைகளின் கலங்கரை விளக்கம்'
மேடைகளில் சிலர்
அரசியவாதியாய் உருமாறினர்

'அறிவியலை கெடுகிறார்கள்'
ஆதங்கப்பட்டான் விஞ்ஞானி
'ஆம்'
தலையசைத்தான் நாத்திகன்

'போடா முட்டாள் '
அமோதித்தவனை
கடிந்துரைதான் விஞ்ஞானி

'அறிவியலால்
ஆன்மாவை காணமுடியாது
கடவுள் எல்லையற்றவன்
விளங்க முடியா கவிதை '
'ஆ ......!
ஆ ......!'
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
இறைவனை கண்டுகொண்டேன்
எல்லாம் இன்பமயம் ..........!
எதிலும் இன்பமயம் ..............!
அனந்த தாண்டவமாடினான்
ஞானி
......................................................
.....................................................
....................................................
..................................................
இறைவன்
பக்கத்துக்கு நிலத்தில்
சிரித்துக் கொண்டிருந்தார்

No comments: