Tuesday, December 15, 2009

இழவு வீடு

நாலைந்து
உண்மை விழிகளின்
வார்த்தைகளில்
கசியும் மௌனம்

உடலைப் பார்த்தவுடன்
கதைகள் பேசி
அழுது , புலம்பி
மூக்கைச் சிந்தி

செல்போன்
சினுங்கியவுடன்
சகஜமாய் உரையாடும்
போலி முகங்கள்

அழவும் தெரியாமல்
ஆறுதலும் கூறாமல்
கவலையை
வரவழைத்து
பேப்பரில்
மூழ்கும் அப்பாவி மக்கள்

இவைகளை அறியாமல்
சொன்னாலும் புரியாமல்
அங்கும் இங்கும்
விளையாடி மகிழ்ச்சியில் திளைக்கும்
வாண்டுகள்

காரிருளில்
கலங்கியிருக்கும்- 'அந்த'
உண்மை விழிகளுக்கு
மெழுகுவர்த்தியாகும்
வாண்டுகளின் சிரிப்பு - எங்கள்
கடவுளின் சிரிப்பு

குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...

8 comments:

thiyaa said...

கவிதை மிக அருமை. பரிசுக்கு வாழ்த்துகள்

முகமூடியணிந்த பேனா!! said...

அருமை .

வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Shakthi said...

usu.. really ur style changed... use of phrases are really nice....

And for the ppl who given comment on this ----
Don say ur wishes for competition..... read the poem, if it touches u, praise it....n realize it... thats enuf

Ashok D said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துகள்

Anonymous said...

ennathu silukku ismitha sithi perusa irukkuma ........

கோ.வினோதினி said...

நான் படித்த உங்கள் கவிதைகளில் இது நல்லாருக்கு.வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

//நாலைந்து
உண்மை விழிகளின்
வார்த்தைகளில்
கசியும் மௌனம்//


மிக அருமை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்